அட தந்தையின் பாடலை சுட்டுட்டேன் 😊! பிரபல இசையமைப்பாளர் மகன்...

அட தந்தை பாடலை சுட்டுட்டேன் 😊 ! பிரபல இசையமைப்பாளர் மகன் செய்த வேலை........


நடிகர் சந்தானம்  சமீப திரைப்படங்கள் பிஸ்கோத் மற்றும் டிக்கிலோனா.இதில் டிக்கிலோனா படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இடம் பெற்றுள்ளார்.அவரின் பிறந்தநாள் இன்று 31 எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள டிக்கிலோனா படத்தில் அனகா ,ஷெரின் ஆகியோர்கள் கதாநாயகியாக நடிக்க யோகி பாபு அனந்த் ராஜ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் காமெடி கதா பாத்திரங்கள் நடிதுள்ளனர்.

மேலும் முக்கியமாக ஹர்பஜன் சிங் இந்த படத்தில் நடித்துள்ளது ரசிகர்களை பெருமளவு ஈர்க்கிறது.இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய யுக்தியை கையாண்டுள்ளாராம்.

அதாவது தனது தந்தை இளையராஜா இசையமைப்பில் கமல்ஹாசன் குஷ்பூ நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் என்னும் படத்தில் வரும் பிரபல பாடல் இசை " வச்சாலும் வைக்காம போனாலும் என்ற பாடலை ரீமேக் செய்து இசை அமைத்துள்ளாராம்.

மேலும்,இளையராஜா அவர்கள் தனது மகனுக்கு எந்த வித காப்பிரைட் பிரச்னையும் கொடுக்க போவது இல்லை.அது சரி சொந்த மகனுக்கு இல்லாத உரிமையா ?

மேலும் இந்த படத்தில் டைம் டிராவல் கால் பயண காட்சிகள் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளது.இந்த படத்தின் கதை ஏற்கனவே நடந்த  தனது கல்யாணத்தை  மாற்றியமைக்க கால பயணம் செய்கிறார் கதா நாயகன்.இதை காமெடி கலந்து படமாக இயற்றியுள்ளார்.

படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர் மற்றும் டிக்கிலோனா ட்ரெய்லர் 10 மில்லியன் பார்வையை வெறும் ஒரே வாரத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நம் பக்கத்தை பாலோ செய்து சுட சுட அப்டேட்களை பெறுங்கள்.நன்றி!




Post a Comment

0 Comments